Monday, April 2, 2012

சாருவின் சாகசங்கள் !

சாருவின் சில நண்பர்களுக்காக, சாருவை கடந்து சென்று விடலாம் என்று கருதினால், சாருவின் துரோகிகள் நம்மை அப்படி எல்லாம் சாருவை விட்டு விட அனுமதிக்க மாட்டார்கள் போல இருக்கிறது. சாருவை எதிர்க்க காரணம் என்ன என்று சில கேள்விகள் வேறு எனக்கு வந்துள்ளது. சரி உடைத்து பேசிவிடுவோம்.
1 . சாருவின் இலக்கிய தரம்(?) காரணமாக எல்லாம், நாம் சாருவை எதிர்க்கவில்லை. எவ்வளவோ பேர் எழுதி தள்ளிக்கொண்டிருக்கும் போது சாரு எழுதகூடாதா, என்ன? ஆர்னிகா நாசர், எழுதுவதை எல்லாம் நாம் எதிர்த்து கொண்டா இருக்கிறோம்? ஆனால், ஆர்னிகா நாசர், நான் தான் உண்மையான இலக்கிய பிதாமகன். மற்றவர் எல்லாம் சோப்ளாங்கி என்று சதா புலம்பினால், கோபம் வருமா, வராதா?
2 . முதல் காரணத்தை விட, முக்கியமான காரணம் இது. சாருவின் நேர்மையின்மை. இதற்க்கு பல உதாரணங்கள் கூற முடியும். கனிமொழி ஆரம்ப கால கட்டத்தில் ஒரு முறை கூறினார். சாரு நான் எழுத வந்த போது என்னை ஒரு வளர்ப்பு தந்தை போல் தத்து எடுத்து கொண்டார் என்று. ஆனால் சாரு, நேர்பேச்சிலும் சரி. ஆரம்ப காலகட்டத்தில் தனது HOTMAIL ID வைத்து சாட் செய்யும் போது சரி. தமக்கும் கனிமொழிக்குமான உறவு குறித்து எப்படி பேசிவந்தார் என்று சொல்ல சொல்லுங்கள்? இதை மறுக்க முடியுமா?. பார்க்கலாம். இவ்வாறு இவர் கற்பனையாக கூறி வந்ததற்கு இவரது பாலியல் வறட்சி தான் காரணம்.
3 . இப்படி இவர் சதா பாலியல் வறட்சியில், உழன்று கொண்டே, மலையாளத்தில் எழுதினார், பாருங்கள். தமிழகமே, பாலியல் வறட்சியில் தவிக்கிறது. எப்படி இருக்குது பாருங்கள், கதை?. அங்கே சென்று நம்மை சிறுமைபடுத்தும் இவர், இதை எழுதி கொஞ்ச நாளிலயே, ஒரு மதுரை பொண்ணிடம், மிக கேவலமாக சாட் செய்து மாட்டினார். இதை சொல்லி சொல்லி சிரிக்கின்றனர் எமது மல்லு தோழர்கள்.முதலில் பாஸ்வேர்டு திருட்டு போய்விட்டது என்றார். பிறகு அந்த சேட் செய்த விஷயத்தை நாவலில் சேர்த்துக் கொண்டார். எல்லாம் பின் நவினத்துவம் சாமி, உமக்கும், எனக்கும் புரியுமா?.
4 . அஜால் குஜால் சாமியார், நித்யானந்தாவை, இவர் ஒரு காலத்தில், கன்னா பின்னா வென்று புரோமோட் செய்தாரே..அதற்கு காரணம் நித்யானந்தாவின் ஆன்மிக ஒளியில் இவர் விழுந்தது மட்டும்தான் என்று அறுதியிட்டு கூற முடியுமா? அப்படி அவர் PROMOTE செய்த போது, சாருவிற்கு, நித்யானந்தா கட்டளை மூலம் ஒரு பெரிய அசைன்மெண்ட் தரப்பட்டு அதற்கு ஈடாக ஒரு பெரும் தொகை ஊதியமாக பேசப்பட்டதா, இல்லையா ? இது, இவர் இப்படி கொடி பிடித்தற்க்காக மறைமுகமாக பேசப்பட்ட சம்பளம் தானே?
5 . எழுத்தாளர் ஜெயமோகன் தனது குடும்ப விசயமாக குறிப்பிட்ட உண்மை என்னவென்றால், அவரது பெற்றோர் இருவரும், தமக்குள் ஏற்பட்ட மனகசப்பில் ஒருவர் பின் ஒருவராக தற்கொலை செய்துகொண்டனர் என்பது தான். ஆனால், MUMMY RETURNS என்ற தலைப்பில், தனது மன வக்கிரங்களை கொட்டி வந்த சாரு, அதில் குறிப்பிட்டார். "ஜெயமோகனது மனவக்கிரம் காரணமாகவே அவரது பெற்றோர் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இது ஒன்றும் நான் சொல்வது அல்ல. ஜெயமோகனே தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பது தான்." என்ன ஒரு மன வக்கிரம் பாருங்கள். யார், ஜெயமோகன் எழுதியதை பார்க்க போகிறார்கள் என்ற மிதப்பில் எப்படி திரித்து தனது பொறமையை தீர்த்து கொண்டார் என்று எண்ணி பாருங்கள். இப்படி ஒரு மன வக்கிரம் புடித்த ஒரு எழுத்தாளர், நல்ல இலக்கியம் படைக்க இயலுமா? நல்ல மனநிலையில் உள்ள ஒரு எழுத்தாளன், தனது சக எழுத்தாளன் குறித்து இப்படி ஒரு அவதூறை செய்ய துணிவானா?
6 . ஏதோ தான்,  இனம், மொழி, மதம், நாடு என்று எல்லாவற்றையும் கடந்த உலக சிட்டிஷன் என்று படம் போடும் சாரு, விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோபிநாத், சாருவிடம் நித்யானந்தாவை ஆதரித்து குறித்து கேட்டு, சாரு பதில் சொல்ல முடியாமல் தவித்தார். நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த உடன் சாரு விட்ட முதல் அஸ்திரம் என்ன தெரியுமா தோழர்களே? நீயா? நானா? சைமன் கோபிநாத்தும், இயக்குனர் ஆண்டனியும் எப்படி இந்து மத பழக்க வழக்கங்களை பழிக்கலாம் என்பது தான். எப்படி? எப்படி? சைமன் கோபிநாத்தாம். எப்படி அடையாளப்படுத்துகிறார் சாரு என்று கவனியுங்கள். இவர் நேர்மையான எழுத்தாளரா? முதலில் நேர்மையான மனிதரா? இவரை விட்டுவிட்டு ஜெயமோகனை இந்துத்துவவாதி என்று குறை  கூறுவது எவ்வளவு அபத்தம்?
7. சாருவின் ஆன்மிக புரிதலுக்கும், ரஜினியின் பாபா பட ஆன்மிகத்திற்க்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஏதேனும் தத்துவ தேடல்களை முன் வைத்து அவரது ஆன்மிக பயணம் இருக்கிறதா?  நித்தியானந்தாவை தான் நினைத்தபடி பயணம் செய்தபோது, எதிரில் திடிரென்று நித்தியானந்தா காரில் சென்றார். உடனே, முன்னாள் நடிகை/இந்நாள் நித்தியின் சீடர் ராகசுதாவை தொடர்பு கொண்டு கேட்டால், சாமி பிடதி ஆஸ்ரமத்தில் அல்லவா, இருக்கிறார். இது மாதிரியான சித்து விளையாடல்கள் எல்லாம் சாமிக்கு “கை வந்த கலை” என்று சொன்னதாக எழுதுகிறார். சாமிக்கு இது மட்டுமல்ல, பல விஷயங்கள் கை வந்த கலை என்பது கொஞ்ச நாளில் அம்பலத்திற்க்கு வந்தது. நித்திக்கு முன்பு, சூபி ஞானி என்று ஒருவரை புரொமொட் செய்தார். அதை நம்பி போன சாருவின் சீடர்களுக்கு, வாயில் லாலிபாப் வைத்தார் அந்த ஞானி. வருஷம் பூரா, ICICI அக்கவுண்ட் நம்பரை சைட்டில போட்டு இலக்கியத்தை(?) கொழு கொழ்ன்னு வளர செய்ங்கடான்னு சொல்றேன், ஒரு பய கிட்ட வரலை. இப்ப என்னடான்னா, சித்தரை வச்சு, தகடு எடுத்த வகையில் பல ஆயிரங்களை கொடுத்திருக்கீங்களே, என்று கொதித்து போய், இனி சித்தருக்கு, அத்தர் கொடுத்து யாரேனும் ஏமாந்தால்,தான் பொறுப்பல்ல என்று பகிரங்க நோட்டீஸ் கொடுத்தார்.

8. சாரு நிவேதிதாவின் ஆத்ம தோழர்கள், ஆறு மாதத்துக்கு ஒரு முறை மாறுவார்கள். இவர் போன் போட்டு, எடுக்கவிட்டால் போதும். இலக்கியம்னா என்னா, உன் வூட்டுல விளையுற கத்திரிக்காய்ன்னு நினைச்சியா என்று கேட்டு இருபது பக்கத்துக்கு பதிவு போட்டுவிடுவார். சரி, அப்படி எந்த இலக்கியத்தை பற்றி உறை()யாற்ற இவர் போன் போட்டு இருப்பார் என்றால், சாயங்காலம் டீக்கடைக்கு(அட, நாங்க எல்லாம் ஹோட்டல் தாஜை அப்படிதான் செல்லமா அழைப்போம்) போய், ஒரு ரண்டு ரவுண்ட் ரெமி மார்ட்டின் போட்டுட்டு, பாஷா போய், களப்பணியாற்றலாமான்னு கேட்க தான் இருக்கும்.  இதை எல்லாம் தாண்டி இவருக்கும், அறுந்தமணி என்று வழங்கபடும் தினமலர் ரமேஷ்க்கும், நட்பு சும்மா நட்டுக்கினு நின்னுச்சு. சரி அறுந்தமணிக்கு, இலக்கியத்தின் மேல் பயங்கர ஈடுபாடு இருக்கும் போலன்னு நினைச்சா, அந்தாளு, தீவிர இலக்கியத்தை தன்னோட கேள்வி பதில், பகுதிலே வாரவாரம் கழுவி ஊத்துராறு. அப்ப எப்படி, சாரு தன்னோட அறசீற்றத்தை பொத்திகினு, அறுந்தமணி கூட நட்பை பேணி காத்தாரு? எல்லாம் டீக்கடை மகிமைதான். இந்த அழகுல, இவரு, ஜெயமோகன், மணிரத்னம் பற்றி எல்லாம் அப்பப்போ பொங்கி, நான் எவன்கிட்டையும் போய் நிக்க மாட்டேன்னு டயலாக் உடுறாரு. மிஷ்கின் படத்துலே விரலை ஆட்டி, ஐம்பதனாயிரம்  சம்பாதிச்சீங்களே அண்ணாச்சின்னு யாராவது அடிமை, சந்தடிசாக்குல, மப்புல கேட்டுபுட்டா அப்பன்னா, என்னை கோபிகிருஷ்னன் மாதிரி சாக சொல்றியாடான்னு, சாமியாடி அவன் போதையை இறக்கிபுடுராறு.

சரி இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஒரே வார்த்தையில் சொல்வது என்றால், சாரு ஒரு HYPROCRITE என்பது தான் முக்கிய காரணம். சமிபத்திய உதாரணம், ஞானிக்கு அவர் எழுதியுள்ள கடிதம். அந்த கடிதத்தில் மனுஷ்யபுத்திரனை தாக்குவதற்கு எந்த ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் யாருக்கும் இது புரியும். கொஞ்சம் கூர்மை இருந்தால் போதும். அவரது வேடம் அம்பலமாகிவிடும். தன்னை ஒருபக்கம் இனம், மொழி,மதம் எல்லாம் கடந்த மாமனிதன் என்று காட்டிக்கொண்டே, மறுபக்கம் இப்படி மதத்தை குறிவைத்து தாக்குதல். முதலில் நீயா? நானா? கோபிநாத், இப்போது மனுஸ்.

1 comment:

  1. உங்களின் எழுத்து அருமையாக உள்ளது நிறைய எழுதவும்..

    ReplyDelete

Write your valuable comments here friends..