Saturday, January 12, 2013

முன்னாள் கோகோ கோலா போராட்ட வீரரின் இந்நாள் கருத்துக்கள்

கூடங்குளத்தில் வன்முறை நடக்க வேண்டும். போராட்டக்காரர்கள் அதாவது மக்கள் சாகவேண்டும்; அதை வைத்து போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு போய் விடலாம் என்று எவ்வளவோ திட்டமிட்டார் உதயகுமார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஒரு வன்முறைச் சம்பவம் கூட நடக்கவில்லை. இதற்கு முழு காரணம், தமிழக முதல்வரும், அவருடைய உத்தரவை அப்படியே நிறைவேற்றிய காவல் துறையும் தான். எக்காரணம் கொண்டும் வன்முறை நடக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார் முதல்வர்.
இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பவர் சாட்சாத் சாரு நிவேதிதா தான். தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில் தான் இப்படி தனது புரிதலை எழுதியிருக்கிறார்.

உதயகுமாரை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் கருத்துச் சுதந்திரம். ஆனால், இந்த் கட்டுரையில் எங்கேயாவது ஒரு எழுத்தாளானுக்கான ஆழமான புரிதலோ, விவாத முறையோ தெரிகிறதா? தினமலர் எப்படி கொலைவெறியுடன் உதயகுமாரை தாக்கி வந்ததோ, அதே முறையில், அதே நடையில்... எழுதப்பட்ட, ஒரு கொலைவெறி அவதூறு கட்டுரைதான் இது. அணு உலையை ஆதரிப்பவர்கள் கூட உதயகுமாரின் போராட்டமுறையை புகழ்கிறார்கள். உதயகுமாரை தனிப்பட்ட வெறியுடன் தாக்கியது தினமலர் மட்டும்தான். இப்போது அந்த பத்திரிக்கையில் எழுதுவதால் அதே கொலைவெறியுடன் தாக்குகிறார் சாரு. மக்களின் எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தகூடாது, அரசு இரும்பு கரம் கொண்டு நசுக்கினால் தான் முன்னேற முடியும் என்பதுதான் இந்த முன்னாள் கோகோ கோலா எதிர்ப்பு போராட்ட தியாகியின் கருத்து. இந்த லட்சணத்தில் இவர் விளிம்பு நிலை எழுத்தாளர் என்று பட்டயம் வேறு. வெட்ககேடு.

தினமலரில் எழுதினால், தினமலர் நடை மற்றும் பக்க சாய்வு, துக்ளக்கில் எழுதினால் துக்ளக் நடை.. இதுதான் சாரு நிவேதிதா.இந்த கட்டுரையை ஒருபோதும் தனது தளத்தில் வெளியிடமாட்டார். அங்கே அவ்வபோது போட்டுவரும் முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் அல்லவா..

அவருடைய முழு கட்டுரையையும் படித்து இன்புறுங்கள். இன்னமும் இவர் ஒரு கலககார எழுத்தாளர் என்று நம்பிக் கொண்டிருக்கும் அசமஞ்சங்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது..

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..