1. இவர்கள், காந்தி, பாகிஸ்தானுக்கு கொடுத்த 55 கோடி ரூபாய் பணத்தினாலேயே, பாகிஸ்தானில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக நம்புகிறவர்கள். இந்த பாலையும், தேனையும் குடித்திவிட்டே, பாகிஸ்தான் தினவெடுத்து, நம்மிடம் வம்பு செய்கிறது என்பது இவர்களது வாதம்.
2. நீங்கள், நாதுராம் கோட்சேவோட WHY I KILLED GANDHI புத்தகத்தை படிங்க. நெட்லே கிடைக்குது. அப்போதான், உங்களுக்கு புரியும் என்று சொல்பவர்கள். நீங்கள், சத்திய சோதனை என்ற புத்தகத்தை பற்றி கேள்வி பட்டதுண்டா என்று மறுகேள்வி கேட்டால் பதில் சொல்லாது, நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்கள்.
3. இந்திய பிரிவினைக்கு காரணம், காந்திதான் என்று சொல்பவர்கள். அப்போது, முகமது அலி ஜின்னா? அவர் பாகிஸ்தான் உருவாகத்தான் காரணமே தவிர இந்திய பிரிவினைக்கு அல்ல என்று வாதிடுபவர்கள்.
4. காந்தி, இஸ்லாமியர்களை கண்டித்து உண்ணாநோன்பு மேற்கொண்டதில்லை என்று நம்புபவர்கள். 1947 இல் நிகழ்ந்த முஸ்லிம் ஹிந்து கலவரத்தை நிறுத்த சொல்லி உண்ணாவிரதம் இருந்தது இருதரப்பையும் கண்டித்துதானே என்றால், இல்லை..இல்லை. அவர் ஹிந்துகளை நிறுத்தசொல்லியும், முஸ்லிம்களை நிகழ்த்த சொல்லியும் உண்ணாவிரதம் இருந்தார் என்று வாதிடுபவர்கள்.
5. எப்போது ஹிந்து-முஸ்லீம் கலவரம் நிகழ்ந்தாலும், ஹிந்துக்கள் திருப்பி தாக்கும்முன் அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்து முஸ்லீம்களை காப்பற்றியது ஏன்? ஹிந்துக்களை தாக்கும்முன் (அதாவது கலவரம் நிகழும் முன் அட்வான்ஸாகJ) அங்கு சென்று உண்ணாவிரதம் இருக்கவேண்டியதுதானே என்பவர்கள்.
6. தனது ஆன்மபலத்தை பரிசோதிக்க காந்தி எதற்கு இரு இளம்பெண்களுடன் தூங்க வேண்டும்? இரு ஆண்களுடன் தூங்கியிருக்கலாமே? என்று கேட்பவர்கள்.
No comments:
Post a Comment
Write your valuable comments here friends..