ஆனந்தவிகடனில், பாலா பேட்டி வந்துள்ளது. ”அவன் இவன்” பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஏன் இப்படி என்ற கேள்விக்கு, "அவன் இவன்" உங்கள் பார்வையில் தான் தோல்வி. ஆனால், நான் விஷால் என்ற கலைஞனை வெளிகொண்டு வந்துள்ளேன். ஆர்யாவை, என் ஊருக்கு அழைத்து சென்று நடிக்க வைத்தேன். தயாரிப்பாளாருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன். என்று பூசி மொழுகுகிறார். பாலாவிடம் இது போன்ற மழுப்பல்களை எதிர்பார்க்கவில்லை. ”அவன் இவன்” பாலா படம் என்று நம்பி, பிளாக்கில் பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கி படம் பார்த்து, நொந்துப் போன ரசிகனைப் பற்றி எந்த கவலையும், இவருக்கு இல்லை. ஆனால், தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன் என்கிறார். இதுதான் இவரது நேர்மையா? படம் ஓடாமல் சறுக்குவது எல்லாம் சகஜம், என்கிறார். படம், நன்றாக இருந்து, ஆனால் பெருவாரியான மக்களுக்கு பிடிக்காமல், ஓடாவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளலாம். இப்படி, ”அவன் இவன்” மாதிரியான ஒரு நேர்மையற்ற படைப்பை எடுத்தது குறித்து, இவருக்கு குறைந்தபட்ச குற்றஉணர்வு கூட இல்லை என்பதுதானே உண்மை. இல்லை, பாலா இன்னமும், இந்த படத்தை நல்ல படம் என்று நினைக்கிறாரா?
ஆமாம், தவறுதான், சறுக்கி விட்டது. என்று ஒப்புக்கொள்ளவிடாமல் எது தடுக்கிறது, இவர்களை.
பாலாவின் மற்ற படங்களை ஒப்பிடுகையில், நந்தா கூட தோல்விதான். ஆனால், அந்த படத்தில் ஒரு இயக்குனரின் உண்மையான உழைப்பிருந்தது. இங்கு நான் உண்மையான உழைப்பு என்று குறிப்பிடுவது, உடல் உழைப்பை அல்ல. ஒரு நல்ல படத்திற்க்கான முயற்சியும், தேடலும், நேர்மையும் நந்தாவில் இருந்தது. ”அவன் இவன்” திரைப்படம், முழுக்க முழுக்க, அவரது பழைய படங்களின் வெற்றியின் வழியாக, தாம் மக்களின் பல்ஸை கண்டுக்கொண்டதாக எண்ணிக் கொண்டு உருவாக்கிய உணர்வுகளற்ற ஒரு டெம்ப்ளேட் பொம்மை. இது பாலாவின் மனசாட்சிக்கு தெரியும். எனவேதான், அவரே, அதை ஜாலியாக செய்ததாக குறிப்பிடுகிறார்.
1. கொடூரமான வன்முறை கிளைமேக்ஸ்.
2. அதற்கு முந்திய காட்சியில் கிளைமேக்ஸ் வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில், வில்லனின் உச்சக்கட்ட கொடுமைகள்.
3. அவ்வபோது, ஹிரோக்கள் குடித்து விட்டு லந்து கொடுக்கும் காட்சிகள்.
4. போகிறபோக்கில் நாலைந்து கெட்டவார்த்தைகள்.
5. ஒரு பிராமின் ஜட்ஜுடன் கூடிய கோர்ட் காட்சி.
என்று ஒரு டெம்ப்ளேட் வைத்துக் கொண்டு, ஜல்லியடிக்க நினைத்தால் இப்படிதான் முடியும். ஆனாலும், அதை ஒத்துக் கொள்ளும் மனதில்லாத பாலா, என்னுடைய மதிப்பில் இருந்தது சறுக்கித்தான் விட்டார். இந்த படத்தை ஏதோ ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு ஃபில் செய்து , பாலாவின் மேல் பாரத்தை போட்டுவிட்டு முண்டக்கட்டையாக நடித்த வி.குமாரை, நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

// பாலாவின் மற்ற படங்களை ஒப்பிடுகையில் நந்தா கூட தோல்விதான். ஆனால், அந்த படத்தில் ஒரு இயக்குனரின் உண்மையான உழைப்பிருந்தது. //
ReplyDeleteஇது உங்கள் பார்வையில். இதையே பாலா ஏன் அவன் இவன் திரைப்படத்திற்கு நினைத்திருக்க கூடாது? ஒரு படைப்பாளிக்கு தான் படைத்ததை நேசிக்க யாரும் இல்லாத போதும் அவன் மட்டுமே அதை நேசிக்க எல்லா உரிமையும் இருக்கிறது. படைப்பாளிகளுக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள் தங்கள் படைப்பை பற்றி பேசுவதற்கு, உங்கள் குப்பை அளவுகோளால் அவர்களை அடித்து நீங்கள் சொல்வதை அவர்கள் ஒத்துக்கொள்ள வைக்க முயற்சிக்காதிர்கள்.
நண்பரே, உணர்ச்சிவசபடாமல் சிந்தியுங்கள். உழைப்பு என்று நான் குறிப்பிட்டதை, தவறாக புரிந்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். திரும்பவும் அப்டேட் செய்துள்ளேன். படியுங்கள்.
ReplyDelete